செங்குன்றம் செய்தியாளர்
சென்னையில் பல காவல் நிலையங்களில் உதவி ஆணையாளர்கள் மாற்றப்பட்டதை தொடர்ந்து , புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் கோயம்பேடு காவல் சரகத்திற்கு மாற்றலாகி சென்றார்.
அதனைத் தொடர்ந்து புழல் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆணையாளராக சிபுகுமார் அவரது அலுவலகத்தில் பதவியேற்றுள்ளார்.
இவர் கூறும்போது, இந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து , கடத்தல் , பெண் வன்கொடுமை போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் வழிப்பறி செய்வோர்கள் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.