திருவாரூர் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 63-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் உள்ள கலைஞரின் தாயார் நினைவிடத்தில் திமுக கொரடாச்சேரி வடக்கு ஓன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சோமாஸ்கந்தன், தஞ்சை இளங்கோவன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அசோகன், திமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் சங்கர், முன்னாள் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் அமுதா சந்திரசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தினேஷ், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துகுமாரசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரபத்திரன் மற்றும் விமலா பிரபாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.