அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் !
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தாழ்த்த பட்ட – ஒடுக்க பட்ட மக்களுக்களின் ஒருவராக நின்று பல்வேறு போராட்டங்களை இறங்கி போராடி களம் கன்டவர் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சுற்று பயணத்தை மேற் கொண்டு சமூக பிரச்சனைகளையும் அரசியல் கலந்த சமுதாய பேச்சுனாலும் பழனி பாபா மீது பல வழக்குகள் இதில் தேசிய பாதுகாப்பு சட்டம் NSA தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது பட்டு இருக்கிறார். ஆனால் பழனிபாபா மீது போட பட்ட வழக்குகள் எந்த வழக்கிலும் தண்டனை பெற வில்லை .
பாதிக்க படும் மக்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி ஆளும் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களையும் குற்ற சாட்டுகளையும் முன் வைத்த பழனி பாபா. பழனி பாபாவின் சொந்த பிரச்சனைக்காக சிறை செல்ல வில்லை சமூகம் பிரச்சனை மற்றும் அரசியல் – சமுதாய சார்ந்த பேச்சுனால் மட்டுமே கைது செய்ய பட்டு சிறைக்கு சென்ற உண்ணதமாக போற்ற படும் தலைவர் பழனி பாபா என்பதில் மாற்று கருத்து இல்லை .
இஸ்லாமிய சமூதாயத்தில் பரவலாக இருந்த வரதட்சணை, வட்டி போன்ற பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் சந்தன கூடு, தர்கா வழிபாடு போன்ற மூட பழக்க வழக்கங்ளுக்கும் எதிராக குரல் கொடுத்தனால் ஒரு சில இஸ்லாமியர்கள் பழனிபாபாவை எதிரியாக நினைத்தார்கள். இஸ்லாமிய சமூதாய பிரச்சனைகளை கையில் எடுத்து கடுமையாக போராடி எத்தனயோ முறை சிறைக்கு சென்றவர் மற்றும் திருமணம் வயதில் திருமணம் செய்யாமல் தனது இளமை பருவதையே சமுதாயத்திற்காகவே போராடி வாழ்கையாக கழித்தவர் பழனிபாபா என்பதை இஸ்லாமியர்கள் மறந்து விட கூடாது. தமிழக இஸ்லாமியர்கள் அனைவரும் பழனிபாபாவுக்கு முழுமையான ஆதரவு கொடுத்திருந்தால் போராளி அல்ஹாஜி பழனிபாபாவை இழந்திருக்க மாட்டோம்.
மது – சூது – மாது போன்ற கெட்ட பழங்கள் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் ஒழுக்கமாக வாழ்ந்தவர் மற்றும் மார்க்க விசயங்களில் தெளிவாக பயணித்தவர் தான் பழனிபாபா என்பது பெருமை குறியது.பழனிபாபா மறைவுக்கு பின்பு தான் இஸ்லாமியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை துனிச்சலாக முன் எடுத்து களம் இறங்கி போராடு ஆரம்பித்தனர் என்பது தான் எதார்த்தமான உண்மை . பழனிபாபா அன்றேய போட்ட விதை இன்றைக்கு மரமாக வளந்து நிற்கிறது . ஆகவே அல்ஹாஜி பழனிபாபா புதைக்க படவில்லை விதைக்க பட்டு இருக்கிறார். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.