எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

வைத்தீஸ்வரன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி பால்காவடி பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக் கோயிலில் முருக பெருமான் செல்ல முத்துக்குமாரசாமியாகவும் பழனி ஆண்டவராகவும் தனித்தனி சன்னதியில் அருள்பாளித்து வருகிறார்.

தைப்பூச திருநாளை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு மாலை அணிந்து ஐந்து நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர்.ஆட்கொண்ட விநாயகர் ஆலயத்திலிருந்து விரதமிருந்த பக்தர்கள் பால் காவடி,பால்குடங்களுடன் புறப்பட்ட பக்தர்கள் நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பழனி ஆண்டவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா திபாரதனை நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *