கோவை குரும்ப பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதித்யா குளோபல் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஆண்டு விழா நிகழ்வு நடைபெற்று வருகிறது…
இதன் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக ஆதித்யா குளோபல் பள்ளியில் (Synergee) சினெர்ஜி 26 எனும் தலைப்பில் ஆண்டு விழா நடைபெற்றது பள்ளியின் தாளாளர் பிரவீண் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில்,ஆதித்யா கல்வி குழுமங்களின் தலைவர் பொறியாளர் சுகுமாறன் கலந்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..
அப்போது பேசிய அவர்,கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கல்வி கற்பதோடு சிறந்த பண்பாளர்களாக வாழ்வில் உயர வேண்டும் என வாழ்த்தினார்..
முன்னதாக விழாவில் பள்ளியில் சிறந்து செயல்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது தொடர்ந்து இளந்தளிர் எனும் இ- ஜர்னல் வெளியிடப்பட்டது தொடர்ந்து இயற்கையின் அவசியத்தையும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவ,மாணவிகள் நடத்தினர்.
இதில் எல்.கே.ஜி.பயிலும் குழந்தைகள் முதலான சிறுவர் சிறுமிகள் பல்வேறு வண்ண உடையணிந்து நடனம் ஆடினர் வண்ண ஆடைகள் அணிந்து மாணவ,மாணவிகள் நடத்திய இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன..
விழாவில் பள்ளியின் முதல்வர் விஜய பிரபா மற்றும் ,ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.