தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே இல்லியம்பட்டி கிராமப் பகுதியில் ஆம்னி கார் திடீர் தீ கேஸ் கசிவால் ஏற்பட்ட விபத்து – தீயணைப்பு வீரர்கள்விரைந்து தீ அணைப்பு.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள இள்ளியம்பட்டி கிராமம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பராய கவுண்டர். இவரது மகன் பழனிச்சாமி, வயது 65. இவர் தனது தோட்ட பகுதியில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை கொண்டு வருவதற்காக, இள்ளியம்பட்டி பொது போர் வழியில் இருந்து, தனது ஓம்னி மாருதி கார், இரண்டு ட்ரம்களில் தண்ணீரை ஏற்றிக்கொண்டு தோட்டத்திற்கு வந்துள்ளார். தோட்டத்தில் உள்ள தொட்டியில் தண்ணீரை ஊற்றிவிட்டு, மீண்டும் காரை இயக்க முயன்றபோது, திடீரென கேஸ் மற்றும் பெட்ரோலுக்கு செல்லும் இணைப்பில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காரில் கேஸ் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்து, தீ மளமளவென பரவியது. தீ பற்றிய காரில் இருந்து பழனிச்சாமி கதவினை உடைத்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீரைப் பீச்சி அடித்து, தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், ஓம்னி கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து, மூலனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது, கேஸ் கசிவே காரணமா என்பதைக் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிராமப் பகுதியில் பகல் நேரத்தில் நிகழ்ந்த இந்த திடீர் ஆம்னி கார் தீப்பிடிப்பு சம்பவம், இள்ளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *