சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி சாலைமறியல் போராட்டம்
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் பரப்பளவில் மிகப் பெரியதாகும்.கடலாடி ஒன்றியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஏர்வாடி ,சிக்கல் பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள கடலாடி க்கும் 30 கிலோமீட்டர் தூரம் இருப்பதால்
அலுவல் சம்பந்தமான பணிகளுக்கு கடலாடி சென்று வருவதற்கு பொது மக்களுக்கு பெரும் சிரமமும் சிக்கலும் இருந்து வந்த நிலையில் கடலாடி ஒன்றியத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கிழக்கு பகுதியில் உள்ள சிக்கல் நகரை மையப்படுத்தி
சிக்கல் ஒன்றியம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்தும் போராடியும் வருகிறார்கள்.
கடந்த 2012-ம் ஆண்டு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிக்கல் நகரை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன் பின்னர் 2021-ம் ஆண்டில் தி.மு.க. கட்சி தேர்தல் அறிக்கையிலும் சிக்கல் நகரை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசு பிரதிநிதிகளிடமும் அரசு அதிகாரிகளிடமும் பலமுறை மக்கள் கோரிக்கை வைத்தனர்
சிக்கல் பகுதியைச் சுற்றி 30 ஊராட்சிகள் 12 ஊராட்சி ஒன்றிய வார்டுகள்.5 காவல் நிலையங்கள ,தமிழக அரசின் உப்பு நிறுவனம்,தனியார் உப்பு நிறுவனங்கள்.
சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனங்கள் சிக்கல் ஏர்வாடி, செல்வனூர் ஆகிய ஊர்களைக் கொண்ட இப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி,கூட்டுறவு வங்கிகள்,
அரசு உயர்நிலைப்பள்ளி,4 அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்படுத்தப்பட்ட சுகாதார மையம், சுகாதார நிலையம்,துணை சுகாதார நிலையங்கள், தீயணைப்பு நிலையம்.
சிக்கல் அருகே வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளம்.
பவளப்பாறை தீவுகள்.
மன்னார் வளைகுடா சுற்றுலா தலங்கள் மற்றும் கீழசெல்வனூர், மேல செல்வனூர் பறவைகள் சரணாலயம்ஆகியவை உள்ளடக்கிய பகுதியாகும்.
இவ்வாறான கட்டமைப்பு வசதிகள் கொண்ட பகுதியில் உள்ள சிக்கல் நகரை மையப்படுத்தி தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு சிக்கல் வட்டார பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக. நேற்று அனைத்துகட்சி சார்பில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் தமிழர் அதிகாரம் கட்சி
பங்கேற்றது அதன் தலைவர் அழகர்சாமி பாண்டியன் தலைமையில்
மாவட்ட தலைவர் கா.மூர்த்தி. மாவட்ட அமைப்பு செயலாளர் மூவேந்திரன்
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கா.முகேஷ்கண்ணா.நயினார் கோயில் ஒன்றிய செயலாளர் சா.அபிமன்யு ஆர்எஸ்மங்கலம் ஒன்றிய செயலாளர் பா.பாரதிபாண்டியன்.
புரோஸ்கான்..வெற்றி. முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலிஸார் கைதுசெய்தனர்