கோவை மாவட்டம் நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கல்வி நிறுவனங்களில் மற்றும் ஏஜேகே வளர்மையம் சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக நவக்கரை நாயகர்கள் விழா வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் பிரபல உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் கலந்து கொண்டு ஒரு மண்ணின் வரலாறு பெருமையும் என்ற கையேடு-யை வெளியீட்டர்.உடன் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் உடனிருந்தார்.
இந்த நவக்கரை நாயகர்கள் விருதானது 30 ஆண்டுகளாக நவக்கரை பகுதியில் சமூக சேவை, விவசாயம்,கல்வி,கலை, மருத்துவம்,இயற்கை விவசாயம்,சமூக பணி கற்பித்தல் உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த சிறந்த விளங்கும் நபர்களை அங்கீகரிக்கும் விதமாக 200-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், ஆசிரியர்கள்,சிறு குறு தொழில் முனைவோர், மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஏஜேகே கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் பேசுகையில்:-
நவக்கரை பசுமையான மலைகளும் அமைதியான சூழலும் கொண்டு வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதி என்றும் தொழில் நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,ஆன்மீகம்,சமூக பண்பாட்டு மையமாக திகழ்ந்து வருகிறது.
மேலும் நவக்கரை உருவாக்க இலவசமாக நிலம் வழங்கிய மக்களின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து சமூக பங்களிப்பை அங்கீகரிக்க விதமாக இந்த நிகழ்ச்சி நடத்துவதாக தெரிவித்தார்.