நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்ட மாநாடு தேனி பழனி செட்டிப் பட்டியில் நடைபெற்றது.மாநாட்டுக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கூடல் செல்வேந்திரன் தலைமை தாங்கினார்,
மாநில இளைஞரணி செயலாளர் எம்.எஸ். மணி, முதன்மை செயலாளர் சுறா, ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநாட்டு தீர்மானங்களை மாநில ஊடகப் பிரிவு செயலாளர் அபுதாஹிர் வாசித்தார்.மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் பி எல் .ஏ .ஜெகநாத் மிஸ்ரா, பொதுச் செயலாளர் பார்மா கணேசன்,ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன்,மாநில மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர், மாநாட்டில் ஜெகநாத் மிஸ்ரா பேசியதாவது, நமது மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு ஐந்து மாதங்களில் ஏழு மாநாடு நடத்தியுள்ள கட்சி இதில் எந்த இடத்திலாவது சிறு பிரச்சனைகள் உருவாகியது இல்லை எங்கள் கட்சி சார்பில் தேனியில் மாநாடு நடத்துவதற்கு காவல் துறையின் கடுமையான கட்டுப் பாட்டால் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. வாகனங்களில் வந்தவர்களையும் போலீசார் இடை மறித்து திரும்ப அனுப்புகின்றனர்
இதுதான் காவல் துறையின் பணியா? ஒரு கட்சி சார்பில் மாநாடு நடத்துகிறோம் .
மாநாடு நடத்துவதற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் காவல்துறையின்அத்தனை கட்டுப்பாடுகளின் ஏற்றுக் கொண்டு
, கடமை கண்ணியம் கட்டுப்பாடோடு தொண்டர்கள் இங்கு குவிந்துள்ளனர்.
மகிழ்ச்சி அளிக்கிறது.தேனி – சபரிமலை ரயில் பாதை திட்டத்தை விரைவாக ஆய்வு செய்து செயல்படுத்திட வேண்டும்
வைகை அணையை தூர்வாரி 20 அடிக்கு மேல் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மேலும்நீரின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.கட்டப்பனை வழியாக கம்பம் மெட்டுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
ஜாதிகள் பெயர்களில் இருந்த விடுதிகள்,தெருக்களில் உள்ள ஜாதி தலைவர்களின் பெயரை நீக்க கூடாது. கம்பத்தில் வ .உ. சி சிலையை வ. உ .சி. திடலில் வைக்க வேண்டும்,கம்பத்தில் ஜவுளி ரெடிமேட் பூங்கா,கம்பம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் தமிழகம் – கேரளாவை இணைக்கும் தேவாரம் சாக்குலூத்து மெட்டுச் சாலை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
சின்னமனூர் கிழக்குப் பகுதி மக்களுக்கு தொட்டமான்துரை கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.திராட்சை தோட்ட தொழிலாளர்கள், ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு தனித்தனியாக நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சீமாங் சென்டராக தரம் உயர்த்த வேண்டும்.
கம்பம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். இவ்வாறு பேசினார். மாநாட்டில்,மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பிரிவு அமைப்பாளர் தேனி மணி,
வியாபாரிகள் நல பிரிவு மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் அருண்குமார்,ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் தங்கப்பாண்டி,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.