முன்னாள் அமைச்சர் ஷாஜகான் குற்றச்சாட்டு,

புதுவை காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடப்பயணம் கலந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது, முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கி பேசுகையில், மத்திய பாஜக அரசு மக்களுக்கு எந்த வித திட்டத்தையும் செயல்படுத்தவில்லை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கும் பயனளிக்காத பட்ஜெட் குறிப்பாக பணக்காரனுக்கு ஏற்ற பட்ஜெட் ஆகவும் இந்த பட்ஜெட் உள்ளது, ஏழ்மையானவர்களுக்கு ஏமாற்றம் கூடிய பட்ஜெட் ஆக நிதிநிலை அறிக்கை உள்ளது, புதுச்சேரியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் இருந்த போது தான் மத்திய அரசு நிதி உதவியுடன் பல்வேறு திட்டங்களை புதுச்சேரி அரசுக்கு கொண்டு வந்தார், மேலும் புதுச்சேரி மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது, மத்திய பல்கலைக்கழகம், புதுவை அரசு பொறியியல் கல்லூரி போன்ற பல்வேறு திட்டங்களையும் புதுச்சேரியில் ஏராளமான தொழிற்சாலைகளை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது, தற்போது தொழிற்சாலைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி இருந்து வருகிறது,
பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளது, புதுச்சேரியில் தற்போது மின் துறை தனியார் மயமாக்குதல் போன்ற பல்வேறு துறைகளையும் தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கையில் இந்த அரசு முயற்சி எடுத்து வருகிறது, புதுச்சேரி மாநிலத்தில் 43 சதவீதத்திற்கு கஞ்சா போன்ற பல்வேறு போதை பொருட்கள் பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது, அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் 65 சதவீதம் குற்றம் நடந்துள்ளதாகவும் ஆய்வு கூறப்பட்டு வருகிறது,
எனவே குற்றம் மிகுந்த பகுதியாக புதுவை மாநிலம் உள்ளது, புதுவையில் அதிக அளவில் குற்றங்கள் நடக்கக்கூடிய மாநிலங்களாக புதுவை மாநிலம் உள்ளது, மேலும் அரசு ஊழியர்கள் 67.90 சதவீதம் பேர் லஞ்சம் வாங்குவதாக ஆய்வு அறிக்கை கூறப்படுகிறது,
அதே போன்று புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர் இதில் 47 சதவீதம் பேர் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வருகின்றனர், எனவே இந்த அரசு மக்களுக்கு எவ்வித திட்டங்களையும் அரசு செய்யவில்லை தற்போதைய கல்யாணசுந்தரம் எம்எல்ஏ பல திட்டங்களை கொண்டு வந்ததாக கூறி வருகிறார், நானும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் நேருக்கு நேராக அமர்ந்து விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன் இந்த ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்களா?
குறிப்பாக சாலை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை அப்படி செய்தார்கள் என நேருக்கு நேராக என்னிடம் கூறினால் எனது மீசையை எடுத்து விடுகிறேன் எனவும் சவாலாக பேசினார், மேலும் புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியும் குறைத்து உள்ளனர், குறிப்பாக எஸ்சி, எஸ்டி மக்களுக்கான நிதியும் குறைத்துள்ளனர் அதேபோன்று மீனவர்களுக்கான ஒதுக்கப்பட்ட நிதியும் குறைத்துள்ளனர் அனைத்து துறைகளுக்கான நிதியும் மத்திய அரசு குறைத்துள்ளது எனவே இந்த அரசு எந்த திட்டத்தையும் இந்த மக்களுக்கு செய்யவில்லை அடுத்த ஆண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி பெற செய்ய வேண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் மேலும் புதுவையில் அடுத்த காங்கிரஸ் ஆட்சி வரும் எனவும் இதற்கு இப்பகுதி மக்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் வாய்ப்பளிக்க வேண்டும் என இவ்வாறு அவர் பேசினார்,
காங்கிரஸ் மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்,
சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன்
எம் எல் ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த ராமன், பாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்,
நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் செயலாளர் சரவணன்,
மாநில பிரச்சார அணி சேர்மன் திருநாவுக்கரசு மற்றும் காலாப்பட்டு காங்கிரஸ் தொகுதி தலைவர்கள் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *