18 மாதங்களாக நடைபெற்று வரும் என்டிஏ கூட்டணி அரசின் மீது தெரிவிக்கும் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க தயாரா?

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை பொது மேடையில் விவாதிக்க பாஜக தயார். என பாஜக தலைவர் சாமிநாதன் கேள்வி இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புதுவை மாநிலத்திற்கு தனி கணக்கை ஆரம்பித்து 70 சதவீத மானியத்தை 30 சதவீதமாக மானியமாக மாற்றி மாநிலத்திற்கு 10 ஆயிரம் கோடி கடன் சுமையை உருவாக்கியது நாராயணசாமியும் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரமும் இணைந்து தான் தான்.

காங்கிரஸ் ஆட்சியில் தான் ஏஎஃப்டி மில்லுக்கு மூடு விழா நடத்தப்பட்டது ரேஷன் கடைகள் மூடப்பட்டதும் இதையெல்லாம் மறைத்து நடைபெறும் என்டிஏ அரசின் மீது வீண்பழி சுமத்துவதில் கைதேர்ந்தவர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளார்.

புதுவை எம்பியாக இருக்கும் திரு வைத்திலிங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன பணிகள் செய்தார் என்று கூற முடியுமா, மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை பிராட்கேஜ் பாதைகளாக மாற்றியது வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுதான். ஆனால் அதனை காங்கிரஸ்காரர்கள் செய்ததாக தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக புதுவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியினால் ஏதேனும் தொழிற்சாலைகள் வந்துள்ளதா எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி காலி பணியிடங்களை நிரப்பாது ஏன்

தற்பொழுது என்டிஏ கூட்டணி ஆட்சியில் 10 ஆயிரம் பதவிகள் நிரப்புவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு முறையாவது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறாரா. இலவச அரிசி பணம் 36 மாதங்களாக கொடுக்காமல் இருந்தது தான் தான் காங்கிரஸ் அரசு.

மத்திய மாநில அரசு இணைந்து கடந்த மாதம் மட்டும் 80 கோடி ரூபாய் மக்களுடைய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.
என் டி ஏ கூட்டணி அரசு செய்துள்ள திட்டங்களையும் சாதனைகளையும் பொது மேடையில் விவாதிக்க பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே தயாராக உள்ளது

. புதுவை மாநிலத்தை சீரழித்தது காங்கிரஸ் அரசுதான். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருந்த சிறப்பு பொருளாதார மண்டலம் சுங்க வரியில்லா துறைமுகம் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது காங்கிரஸ் ஆட்சி தான்.

காரைக்கால் மாகி ஏனம் பகுதியில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளைகளை கொண்டு வந்தது மத்திய பாரதிய ஜனதா அரசு இதையெல்லாம் மறைத்து கபட நாடகம் ஆடி வருகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. தற்போதைய NDA கூட்டணி ஆட்சியில் சுமார் 20000 பேருக்கு முதியோர் பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஏஎப்டி நிலுவைத் தொகை 67 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் மிகுந்த அரசு காங்கிரஸ் அரசு ஏழை மக்களுக்கான அரசு NDA என்பதில் மாற்றமில்லை.
கடந்த ஆட்சியில் அரிசியில் ஊழல் துணியில் முறைகேடு டெண்டரில் ஊழல் சுனாமி குடியிருப்பில் முறைகேடு என பல ஊழல் செய்து அதிகமான சிபிஐ விசாரணையை சந்தித்தது நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தான். அதுமட்டுமின்றி அவர் தனியார் கல்லூரியில் லஞ்சம் பெற்று அந்த பணத்தில் தான் வெற்றி பெற்றார் என அவருடைய சட்டமன்ற உறுப்பினர்களே சட்டப்பேரவையில் குற்றம் சுமத்தியதை மக்கள் மறந்து விடவில்லை.

இப்படிப்பட்ட ஊழல் புகார்களுக்கு சொந்தக்காரரான பொய்களை மட்டுமே பேசக்கூடிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி NDA அரசாங்கம் மீது குற்றம் சுமத்துவது வேடிக்கையாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை பொது மேடையில் விவாதிக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும் அதனால்தான் கடந்த தேர்தலில் ஒரு காங்கிரஸ்காரர் கூட வெற்றி பெறவில்லை என்பதை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *