தேசிய விலங்கியல் ஆய்வு நிறுவனம் சார்பில் புதுச்சேரியில் உயிரின வகைகளின் பன்முகத்தன்மை புத்தக வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடந்தது. புத்தகத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் பெற்றுக்கொண்டார்.
விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, புதுச்சேரிக்கு இயற்கை பல கொடைகளை தந்துள்ளது. சுகாதாரம், உட்கட்டமைப்பில் தேசிய குறியீடுகளின் அடிப்படையில் புதுவை முதல் இடத்தில் உள்ளது. நாட்டின் வளர்ச்சிப் பாதையில் புதுச்சேரி ஒரு குறிப்பிட தகுந்த இடத்தை பிடிக்கும். அதற்காக பாடுபட்டுகொண்டிருப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் தேசிய விலங்கியல் ஆய்வு நிறுவன இயக்குனர் திரீத்தி பானர்ஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். பூங்காவில் நூலகம் புதுவையில் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அவர்கள் விளையாடும் இடமான பூங்காக்களில் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி லாஸ்பேட்டை அசோக்நகர் பூங்காவில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் குழந்தைகள் மகிழ் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.நூலகத்தை கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் திறந்து வைத்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், குழந்தைகள் நூலகத்தை தேடிப்போய் படிப்பது கஷ்டம் என்றும், அவர்கள் வரும் இடங்களில் புத்தகங்களை வைத்தால் படிக்கும் பழக்கம் ஏற்படும் என்றும், குழந்தைகள் நமது அஸ்திவாரம். அவர்களை மேம்படுத்தினால் சமூகம் தானாக மேம்படும் என்றும் குறிப்பிட்டார். அன்றயை பாடத்துடன் பொது அறிவு, சுயசரிதைகளை படிப்பதற்கும் நேரம் ஒதுக்கினால்தான் சாதனையாளர்களாக முடியும் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சிவராஜன், கண்காணிப்பாளர்கள் சக்தி நாராயணன், செந்தில்நாதன், அருள்ராஜ், ஆலோசகர் சம்பந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *