தமிழகம் வெற்றிக் கழகம் – திருப்பூர் மாநகர மாவட்ட தொழிலாளர் அணி சார்பில்
மறைந்த போராளி நல்லகண்ணு அவர்களுக்கு மௌன அஞ்சலி
தமிழகம் வெற்றிக் கழகம் திருப்பூர் மாநகர மாவட்ட தொழிலாளர் அணி தலைமை சார்பாக மறைந்த தோழர் போராளி நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த மௌன அஞ்சலி நிகழ்ச்சி திருப்பூர் மாநகரில் போயம்பாளையம் நால்ரோடு சாலையில் நடைபெற்றது மாநகர மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மாவட்ட இணை அமைப்பாளர்கள் ரமேஷ், பரணி, அருண்,நிர்வாகிகள் சந்தோஷ், ஹரி, விஜய், சிரஞ்சீவி,
மேலும் தலைமை நிர்வாகிகள் மற்றும் பகுதி வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த நல்லகண்ணு ஐயா அவர்களின் போராட்டப் பணிகள் மற்றும் சமூக சேவைகளை நினைவுகூர்ந்து அனைவரும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.