ராகவி சினி ஆர்ட்ஸ் & நீலாவதி டிரஸ்ட் – பிறந்தநாள் நலத்திட்ட விழா
ராகவி சினி ஆர்ட்ஸ் மற்றும் நீலாவதி டிரஸ்ட் சார்பில்,இயக்குனரும், நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்டும், சமூக சேவகருமான இப்ராஹிம்,சமூக சேவகர் கருங்காலக்குடி சந்துரு,
குழந்தை நட்சத்திரம் பிரஹர்சிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பான நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ. விக்டர் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மற்றும் குழந்தை நட்சத்திரம் லியானா இணைந்து 105 நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினர்.
பிறந்தநாளை சமூக சேவையுடன் கொண்டாடிய இந்நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது