திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நெல்லை மாவட்டம் கூத்தங்குளி பகுதியை பூர்வீகமாக கொண்ட கான்ஸ்டன்ட் ரவீந்திரன் என்பவரை திமுக அறிவித்துள்ளது மீனவரான இவரை அறிவித்ததை தொடர்ந்து முத்து குளித்துறை பரதர் நலச் சங்க நிர்வாகிகள் கூறுகையில் பொதுச் செயலாளர் ராஜு கூறுகையில் கடந்த மாதம் 21ஆம் தேதி எங்கள் சங்க மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் ஆறு மாவட்ட பரதர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் அனைத்து அரசியல் கட்சிகளிலும் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மீனவர் அணிக்கு மட்டும் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நாங்கள் கோரிக்கை வைத்தோம் அந்த கோரிக்கையின் அடிப்படையில் 22ஆம் தேதி எங்கள் சங்க நிர்வாகிகள் அனைவரையும் உறுப்பினர்களையும் தனியார் ஹோட்டலுக்கு வருமாறு திமுக தலைமை எங்களுக்கு அழைப்பு விடுத்தது அதன் அடிப்படையில் நாங்கள் அங்கு சென்றோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் நகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட திமுகவினர்

அங்கு இருந்தார்கள் எங்கள் சமுதாயத்தின் சார்பில் நாங்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை படித்து காண்பித்து திமுக நிர்வாகிகளிடம் வழங்கினோம் தமிழக முதலமைச்சரிடம் எங்களது கோரிக்கையை கொடுக்குமாறு கோரி இருந்தோம் அதன் அடிப்படையில் எங்களுடைய கோரிக்கையை தமிழக முதலமைச்சரிடம் கொடுத்ததார்கள் அதன் அடிப்படையில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக எங்கள் சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

அதற்கு எங்கள் சமுதாயத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கும். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மீனவ சமுதாய மக்கள் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக இருப்போம் எங்கள் சங்கத் தீர்மானத்தின் அடிப்படையில் எங்கள் பரதர் நல சங்கத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரனுக்கு மாநிலங்களை உறுப்பினர் வழங்கியதற்கு மீண்டும் மீண்டும் தமிழகம் முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்த அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும் எங்கள் முத்து குழித்துறை பரதனர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிர்வாகிகள் கூறினார்கள் உடன் தலைவர் கனகராஜ். செயலாளர் ராஜு. பொருளாளர் மிக்கேல். அவைத் தலைவர் ஜான்சன் டல்மோதா. மெரின்டோ. துணைத் தலைவர் ராஜா. பிச்சையா. துணைச் செயலாளர் சசி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *