துறையூர் சிஎஸ்ஐ பகுதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கான
பூமி பூஜை
துறையூர் மார்ச் -08
திருச்சி மாவட்டம், துறையூர் C.S.I -ஹவுசிங் யூனிட் பகுதியில் 07-03-2026 அன்று துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 10-லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில், எம்எல்ஏ ஸ்டாலின்குமார், முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், ஆதிதிராவிடர் நல அணி வீ.சுப்ரமணியன், தொமுச ராஜீ,வழக்கறிஞர் கண்ணன், ஒப்பந்ததாரர் இந்திரஜித் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்