தூத்துக்குடி மாநகர்
டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டி.20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியை பொதுமக்கள் பெரிய திரையில் பார்த்து மகிழும் வகையில் முத்துநகர் கடற்கரை பூங்காவில் பெரிய அளவிலான எல்.இ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியை கண்டு களிக்கலாம் என்றும், இந்த வசதியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேயர் ஜெகன் கேட்டுக்கொண்டுள்ளார்…