திருத்துறைப்பூண்டி., மார்ச்.08

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மன் ஆலய அஷ்டபந்தன வர்ண கலாபன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூன்று கால யாகசாலை பூஜை நடைபெற்ற உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டிய உலக பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கு யாகசாலை பூஜை நடைபெற்றது.

யாகசாலை பூஜையில் இருந்து கடம் புறப்பட்டு ஆலயம் வலம் வந்து கோபுர கலசத்தில் வைக்கப்பட்டுள்ள விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேக பெருவிழாவில் பங்கெடுத்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்கள் ஆலய நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் ,கோவில் செயல் அலுவலர் ,கோவில் தர்க்கர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் கோவில் நிர்வாகிகள் ,கிராமவாசிகள் ,பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *