பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா.பழூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் கீழ் ரூ.5.70 கோடி மதிப்பிலான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து திறந்து வைத்தார்.
முதலில், AGAMT 2025–2026 திட்டத்தின் கீழ் தென்கச்சிப்பெருமாள்நத்தம் கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து தாதம்பேட்டை ஆதிதிராவிடர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025–2026-ன் கீழ் ரூ.3.54 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
மேலும், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் திட்டம் 2025–2026-ன் கீழ் கோடாலிகருப்பூர் கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடத்தில் ஒரு கண் வடிகால் மதகு கட்டும் பணியும், காரைக்குறிச்சி ஊராட்சி அருள்மொழி கிராமத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் இடது கரையை புனரமைக்கும் பணியையும் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், உதவி பொறியாளர் நாவலடியன், திமுக தா.பழூர் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் இரா.அண்ணாதுரை, ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், மாவட்ட அணி நிர்வாகிகள் த.சம்மந்தம், ந.கார்த்திகைகுமரன், த.குணசீலன், அ.தங்கபிரகாசம், முனைவர் முருகானந்தம், எழிலரசி அர்சுனன், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மகாலிங்கம், நீல.மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அலுவலர்கள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.