கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் ‘(Womens Center by Motherhood)’ மருத்துவமனையின் குழந்தைகளுக்கான வெளி நோயாளிகள் பிரிவு வளாகத்தில் குழந்தைகளுக்கான பல் சிகிச்சை பிரிவு துவக்கம்
கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான பிரத்யேக வெளி நோயாளிகள் பிரிவு(OPD Clinic ) மேட்டுப்பாளையம் சாலை எருக்கம்பனி அருகில் சங்கர் டிம்பர் பில்டிங் முதல் தளத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் குழந்தைகளின் ஆரோக்கியமான புன்னகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,குழந்தைகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவில் குழந்தைகளுக்கான பல் சிகிச்சை பிரிவு (Paediatric Dental Clinic) துவங்கப்பட்டது..
மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன்,. மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், தலைமை விருந்தினராக மூத்த பல் மருத்துவ நிபுணர் டாக்டர் .ராஜ்குமார் கலந்து கொண்டு புதிய குழந்தைகளுக்கான பல் சிகிச்சை மருத்துவ பிரிவை துவக்கி வைத்தார்..
இதில் குழந்தைகளுக்கான பல் மருத்துவர்கள் டாக்டர். பத்மநாபன் மற்றும் டாக்டர் .அபர்ணா,விமன்ஸ் சென்டர் பை மதர்ஹட் மருத்துவமனையின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜெயராம், ,தலைமை இயக்க அலுவலர் டாக்டர் ரம்யா ஜெயராம், மற்றும் மருத்துவமனையின் மைய தலைவர் சபரிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்…
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கர் டிம்பர்ஸ் கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள பல் சிகிச்சை பிரிவில் குழந்தைகளின் பல் ஆரோக்கியத்திற்காக பிரத்யேகமான மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்…
குறிப்பாக குழந்தைகளுக்கான பல் பராமரிப்பில் ஒரு புதிய யுகத்தை உருவாக்குதல்” என்ற தாரக மந்திரத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், குழந்தைகளுக்குப் பயமில்லாத வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சிகிச்சை முறைகள் வழங்கப்பட இருப்பதாகவும் புதிய பல் சிகிச்சை பிரிவின் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்…