பரமத்தி வேலூரில் சவுத் இந்தியன் ரெசிடென்சி ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையான மக்கள் அதிகாரம் தேர்தல் அறிக்கையை தமிழக வெற்றி கழகம் திருடிவிட்டது என்று மக்களோடு நாம் இயக்கம், உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம், தமிழக நீதி கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் குற்றச்சாட்டு.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் மக்களோடு நாம் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் S.மனோகரன், உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் கட்சியின் நிறுவனர் P. தேக்கமலை, தமிழக நீதி கட்சியின் பொதுச் செயலாளர்
N.பாஸ்கரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


மக்களோடு நாம் இயக்கம் மனோகரன் தெரிவிக்கையில் கடந்த மாதம் 6ஆம் தேதி தமிழக நீதி கட்சி நடத்திய மாநாட்டில் மக்களோடு அதிகாரம் என்ற எங்களது மூன்று கட்சிகளும் சேர்ந்து தயாரித்த தேர்தல் அறிக்கையை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சூரியமூர்த்தி ஆகியோர் வெளியிட்டனர்.


அந்தத் தேர்தல் அறிக்கையைதவெக வின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜிடம் காண்பித்தோம். பிறகு அவர் எங்கள் தலைமையிடம் காண்பித்து விட்டு உங்களை அழைக்கிறேன் என்று சொன்னவர் இது வரையில் எங்களை அழைக்கவில்லை ஆனால் 23ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழகம் வெற்றி கழகம் தலைவர் விஜய் அறிவித்த தேர்தல் அறிக்கை திட்டங்கள் போட்டித் தேர்வுகளுக்கு அரசு பள்ளிகளில் உரிய நடைமுறையை சாத்தியப்படுத்த வேண்டும்.1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் அதற்கு தூண்டுகோலாக மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் மற்றும் நேற்று நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் விஜய் பேசும் பொழுது மகளிர் தொழில் முனைவோர் ஆக்க 5 லட்சம் மானிய கடன் திட்டம் அனைத்தும் எங்களது தேர்தல் அறிக்கையில் இருந்து திருடப்பட்டவை என்ற குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

எதற்காக இந்த தேர்தல் அறிக்கையை அவரிடம் காண்பித்தோம் என்றால் அவரோடு நாங்களும் பயணிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் கட்சிகளை அழைக்காவிட்டால் எங்களது கட்சிகளை சேர்ந்த தலைவர்களிடம் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். நாங்கள் தனித்து 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்று தெரிவித்தனர்.

தமிழக நீதி கட்சி மாநில தலைவர்ஆர்.ஜெகன், தமிழக நீதி கட்சி, மக்களோடு நாம் இயக்கம் தலைமை இயக்க தலைவர்மு சமியுல்லா, செந்தில் ராஜா மக்களோடு நாம் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர், மக்களோடு நாம் இயக்கம் அருள்முருகன், கரூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழக நீதி கட்சி ர.வடிவேலு, பொருளாளர் மக்களோடு நாம் இயக்கம், மணிகண்டன் மக்களோடு நாம் இயக்கம் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர், ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *