தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய சமுதாயக் கூடத்தில் இன்று த.வெ.க சார்பில் புதிதாக பிரிக்கப்பட்ட குண்டடம் தெற்கு ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் யுவராஜ் மகேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் குண்டடம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துவடுகநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் சம்பத், கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ருத்ராவதி பேரூர் செயலாளர் தாமரை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.