தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்
தேனி மாவட்டம் தேனி நகரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பெரியகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சக்திவேல் என்ற ஆற்றலரசு ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரியகுளம் ஒ. பன்னீர்செல்வம் கம்பம் என்.இராமகிருஷ்ணன் ஆகிய வேட்பாளர்கள் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பல்வேறு ஆலோசனைகளை தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசி சிறப்புரையாற்றினார் இந்த கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தேனி நகரச் செயலாளர்கள் சூர்யா பாலமுருகன் என்.சி. நாரயண பாண்டியன் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்