திருவாரூர் செய்தியாளர்
வேலா- செந்தில்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் 05.04.2026, ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் அருகே உள்ள பவித்திர மாணிக்கம்,மங்கல் வரதர் மஹாலில்,திருவாரூர் சட்டமன்ற வேட்பாளரும் கழக திமுக மாவட்ட செயலாளரும் ஆகிய பூண்டி கே, கலைவாணன் தலைமையில் நடைபெற்றது,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் & நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் & நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் BLA-2,BLC அனைவரும் கலந்து கொண்டனர்.
அபார வெற்றிக்கு சூளுரை இக்கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்திற்கு திமுக, மதிமுக, காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ, காங்கிரஸ், விசிக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர், உள்ளூர் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினுடைய மாவட்டச் செயலாளர்கள்,கழக செயல்வீரர்கள் பெரும் திரளானோர் கலந்து கலந்து கொண்டனர்,கொரடாச்சேரி ( தெற்கு)ஒன்றிய செயலாளர்,
ஆர். பாலச்சந்திரன் நன்றி உரையாற்றினார்