ரா.கோபாலகண்ணன் செய்யூர் செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே பவுஞ்சூர் நோக்கி சென்ற ஆட்டோ ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி மீது லேசாக உரசியதால் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் காயம் அடைந்தனர்.
அதிகளவில் கிரஷர் லாரிகள் விதிமுறைகளை மீறி பயணிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெற்குனப்பட்டு கூட்ரோடு முதல் கூவத்தூர் வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது