15.04.2026 அன்று தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து, சிறந்த இரத்ததான சேவைகளை வழங்கிய நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தன.

இந்நிகழ்வில், திருத்தங்கல் நாடார் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS), தேசிய மாணவர் படை (NCC), இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (YRC), ரெட் ரிப்பன் கிளப் (RRC) ஆகிய அமைப்புகள் இணைந்து ஆண்டுதோறும் சிறப்பாக இரத்ததான முகாம்களை நடத்தி, ஸ்டான்லி மருத்துவமனை இரத்த வங்கிக்கு தேவையான இரத்தத்தை தொடர்ந்து வழங்கி வந்தமைக்காக, “சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர்” என்ற விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை, முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஜோ. சம்பத்குமார் அவர்கள் கல்லூரி சார்பாகப் பெற்றுக் கொண்டார். இவ்விருது விழாவில் மருத்துவமனை முதல்வர் டாக்டர் அரவிந்த், துறைத் தலைவர் டாக்டர் வனிதாமலர், டாக்டர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கல்லூரியின் இந்த சிறப்பான சாதனையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும், இம்மாபெரும் நிகழ்வை நடத்த வழிநடத்திய திருத்தங்கல் நாடார் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் திரு. அ. நாராயணமூர்த்தி, முதல்வர் முனைவர் வெ. தேவி, துணை முதல்வர் முனைவர் கே.சி. லலிதாம்பிகை மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சையத் பாசில் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் சு. நரேந்திர குமார், ஜெ. தேவி(YRC) , முனைவர் மா. மார்த்தாண்ட பூபதி(RRC) ஆகியோர்கள் சிறப்பாக நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *