கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் ஞாயிற்றுக்கிழமை பள்ளி (Sunday School) சார்பில் “Rock Expo 2.0” எனும் சிறப்பு கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலயத்தின் பரிஷ் ஹால் (முதல் மாடி) வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வண்ணம் சிறப்பாக அமைந்தது.
இந்த கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவர்கள் தயாரித்த பல்வேறு கைவினைப் பொருட்கள், மாதிரி வடிவங்கள், வேதாகமக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட காட்சிப்படுத்தல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றன.
“Earth – God’s Creation & Foundation of Life”, “Water – Purification & New Life in Christ”, “Fire – God’s Presence & Power”, “Air – Breath of Life & Holy Spirit” போன்ற தலைப்புகளின் கீழ் மாணவர்கள் உருவாக்கிய காட்சிகள் பார்வையாளர்களை ஈர்த்தன.
மாணவர்களின் சிந்தனை திறன், ஆன்மிகப் புரிதல் மற்றும் கலைநயம் ஒருங்கிணைந்த இந்த நிகழ்ச்சி, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குடும்பத்துடன் கலந்து கொண்டோர், மாணவர்களின் முயற்சியை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை பள்ளியின் கண்காணிப்பாளர் அனிதா காட்வின் மேற்கொண்டார். அவரின் வழிகாட்டுதலின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
இந்த “Rock Expo 2.0” நிகழ்ச்சி, மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாகவும், ஆன்மிக மதிப்புகளை குழந்தைகளுக்கு எளிமையாக எடுத்துரைக்கும் முயற்சியாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.