அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்ததில் சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் இன்டோன் கேஸ் சிலிண்டரை திருச்சி குடோனில் இருந்து அரியலூரில் உள்ள டீலருக்கு லாரி முழுவதும் நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர்களை திருச்சியில் இருந்து அரியலூருக்கு ஏற்றி வந்துள்ளார். அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வளைவில் திரும்பும் பொழுது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. பலத்த காயங்களுடன் லாரி ஓட்டுநர் கனகராஜ் குதித்து தப்பித்துள்ளார்.

உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரியில் இருந்த மற்ற சிலிண்டர்களும் ஒவ்வொன்றாக வெடித்து தீ பற்றி எரிகிறது. லாரி முற்றிலும் எரிந்து சேதம் ஆகியது. சிலிண்டர்கள் வெடித்து வானளாவிய அளவில் தீப்பிழம்பு எழுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அரியலூர் தீயணைப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் திருச்சியில் இருந்து அரியலூருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் வி.கைகாட்டி வழியாக அருகில் ஊருக்கு மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அருகில் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அருகில் வீடுகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *