கம்பம் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத்திற்க்கு உட்பட்ட ஒன்றிய பகுதிகளான நாராயண தேவன் பட்டி சுருளிப்பட்டி காமய கவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் நா.இராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. மகாராசனுக்கு வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கம்பம் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் தலைமையில் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்க முருகன் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கிராம மக்களிடம் தெருத்தெருவாக வீடு விடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்கள் பணிகளையும் மக்களுக்கு எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.