புதுச்சேரி
சுயமரியாதைச்சுடர் எம். ஏ. சண்முகம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு 06.06.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் மரப்பாலம் – புவன்கரே வீதி சந்திப்பில் அமைந்துள்ள அன்னாரின் சிலைச்சதுக்கத்தில் நடைபெற உள்ளது.
மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் பங்கேற்று அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நன்றி.
நாள்: 06.06.2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.30 மணி
இடம்: மரப்பாலம் – புவன்கரே வீதி சந்திப்பு