ராயல் கேர் மருத்துவமனை சார்பாக சின்னியம்பளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் திறப்பு விழா
சி.எஸ்.ஆர்.நிதியின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் மாதேஸ்வரன் திறந்து வைத்தார்
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துமனை சார்பாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் சி.எஸ்.ஆர்.நிதியில் இருந்து சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 35 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய சுகாதார கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டது..
இந்நிலையில் இதற்கான துவக்க விழாவில் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் புதிய சுகாதார கட்டிடங்களை திறந்து வைத்தார் mபுதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சுகாதார கட்டிடத்தில் மாணவ,மாணவிகளுக்கு தனித்தனியே கழிப்பறைகள்,மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும்.பள்ளி ஊழியர்களுக்கு என தனியே கழிப்பறைகள் மேலும் கை கழுவுதற்கு என தனியே வசதிகள் என உருவாக்கப்பட்டுள்ளன..
மாணவர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சிறந்த முன்னெடுப்பாக உருவாக்கப்பட்டுள்ள நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை அர்ப்பணித்த ராயல் கேர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பள்ளி தலைமையாசிரியர்,பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்..
நிகழ்ச்சியில்,ராயல் கேர் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி,தலைமை நிர்வாக அதிகாரி சி.ஓ.ஓ.மணி செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்..