மாற்றுத்திறனாளி களுக்கான 8வது இந்திய ஓபன் பாரா சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி மே 26 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை 2026 பெங்களூரில் நடைபெற்றது.

போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மூலமாக 36 பாரா தடகள வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் மதுரையைச் சேர்ந்த மனோஜ் பிரிவு 41 ல் குண்டு எறிதலில் தங்கம், கௌதமன் பிரிவு 32 ல் கிளப் த்ரோ பிரிவில் தங்கப்பதக்கம் குண்டு எறிதலில் வெண்கல பதக்கம், முனியசாமி பிரிவு 53 ல் குண்டு எறிதல் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். மற்றும் பாண்டி மீனா, எட்வர்டு பிரான்சிஸ் போட்டியில் பங்கேற்று ஏசியன் பாரா கேம்ஸூக்கு பதக்கம் பெற்று தகுதி பெற்றுள்ளனர்

இவர்களின் மாற்றுத்திறனாளி களுக்கான பயிற்சியாளரும் தயான் சந்து விருது பெற்றவருமான ரஞ்சித் குமாரும் உடன் சென்று இருந்தார். வெற்றி பெற்றவர்களுக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டு விழா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது, ஸ்டார் குரூப் பவுண்டேஷன் நிறுவனத்தலைவர் குருசாமி பாராட்டி பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் பாராட்டி வாழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *