100% வாக்களிப்போம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி சார்பில் வ உ சி தினசரி சந்தையில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அ. லாரன்ஸ் ரமேஷ் தலைமையில் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் ப. திருமூர்த்தி மாவட்ட தலைவர் .இரா.க. சண்முகவேல் மாவட்ட செயலாளர் .பொ.இராமச்சந்திரன் மாவட்ட பொருளாளர் உதயம் பொ.செல்வம், கோவை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் .மு.பாலகிருஷ்ணன் மாவட்ட துணை தலைவர் நெல்லை ஏ.ராஜா மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சாதிக் பாட்சா மற்றும் நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம், ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கம் தந்தை பெரியார் காய்கனி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.