வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில்
SIR-க்கு எதிராக அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பாக திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், விசிக மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.