தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதி வார்டு 5 கீரைக்கடை தெருவில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 இன்படி பேரூராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்களில் சேகாரம் ஆகும் குப்பைகளை பேரூராட்சியின் முக்கிய அங்கமான பணியாளர்களான தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் தெருக்களை தூய்மையாக வைக்கும் விதமாக தெருக்களில் நான்கு விதமான குப்பை கழிவுகள் பிரித்து வழங்குவது குறித்து வண்ண வண்ண கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
இந்த தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் இளநிலை உதவியாளர் ஜீவராஜ் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.