மன்னார்குடி., ஏப்ரல் 04

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி வைக்க மாட்டோம் என அறிவித்திருந்த நிலையில் திடீரென 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெற்றுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அமமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்த நிலையில் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அமமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அமைச்சர் டி ஆர் பி ராஜா முன்னிலையில் மன்னார்குடி சட்டமன்ற தேர்தலில் திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கவியரசு மாவட்ட பிரதிநிதி கருணாநிதி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தேசபந்து , மாவட்ட பிரதிநிதி பாசறை ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *