சிறுகுடி முத்தாலம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகபடுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் தலைமையில் நத்தம் ரவுண்டானா அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் கதலி நரசிங்கபெருமாள், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் வீரராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் தனபாலன், மாவட்ட துணைத்தலைவர் சொக்கர், மாவட்ட பொது செயலாளர் கார்த்திகை சாமி, அமைப்பு சாரா பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், வடக்கு ஒன்றிய தலைவர் பாக்யராஜ், சிறுகுடி ஊர் பிரமுகர் ஆசை அலங்காரம் உள்ளிட்ட சிறுகுடி கிராம மக்கள், பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.