கரூர் செய்தியாளர் மரியான்பாபு
தமமுக ஜான்பாண்டியன் பிரச்சாரம்..
தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எம். ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் கரூரில் பெரிய ஆண்டாங்கோவில், சின்ன ஆண்டாங்கோவில், தாந்தோணிமலை, காந்திகிராமம், பாலம்மாள்புரம், நீலிமேடு என பல இடங்களில் வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அமைச்சராக இருந்த பொது கரூர் மக்களுக்கு அதிமுக செய்த உதவிகள்,திட்டங்கள், சாதனைகளை கூறி வாக்குசேகர்த்தார்.அப்பொழுது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.