பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இ.சி.கோவிந்தராசன் அவர்களுக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் இரவிச்சந்திரன் வாக்கு வாக்கு சேகரிப்பு
தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் இ.சி கோவிந்தராசன் அவர்கள் நேற்று அகரம், கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துவிட்டு பின்பு அகரம்,பட்டகரஅள்ளி, குடிமேனஅள்ளி, தேவிரஅள்ளி, பண்ணந்தூர் பாப்பாரப்பட்டி வாடமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிச்சாமி, பிஜேபி மாவட்ட துணை தலைவர் தருமன், ஊராட்சி செயலாளர்கள். கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.