செய்தியாளர் ஜீவா செந்தில்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில்
வள்ளலார் மாத பூசத்தையொட்டி சன்மார்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு முருகன்குடி எம். ஆர். எஸ். ஈஸ்வரா வணிக வளாகம் வள்ளலார் பணியகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.
நிகழ்விற்கு முருகன்குடி வள்ளலார் பணியகத்தின் பொறுப்பாளர் தயவுத்திரு தங்க. பன்னீர்செல்வம் தலைமையேற்றார் முருகன்குடி வள்ளலார் பணியகம் சிறப்புத்தலைவர் நாட்டு வைத்தியர் சிவ. வரதராஜன் திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வரின், திருக்குறள் நெறி பரப்பும், விருது பெற்ற கல்லக்குறிச்சி திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயவுத்திரு மோகன் “வள்ளலாரும்- பல்லுயிர்களும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தாக்கவுரை ஆற்றினார்.
வள்ளலார் பணியகத்தின் செயலாளர் பெண்ணாடம் பிரதாபன் அருட்பா பாடினார்.
நெய்வேலி நகரத்தைச்சேர்ந்த சித்திவிநாயக மூர்த்தி, ஜோதி என்கிற என்எல்சி பொறியாளர்,இளமதி பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்தார் பசியாற்றுவித்தல் அறப்பணியை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சன்மார்க்க சான்றோர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை பாரம்பரிய மருத்துவர் பெரங்கியம் சிவ. வரதராஜன் , பெண்ணாடம் சுப்பிரமணியன் வர்மா மற்றும் பாத சிகிச்சை கட்டணம் இல்லாத மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியை முருகன்குடி முருகன், அரா. கனகசபை, எரப்பாவூர் ராமசாமி, டிவி புத்தூர் வீராசாமி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.