கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அந்த நிகழ்வில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்குவதற்காக அனுமதி கோரப்பட்டது.
இதற்கான அனுமதியை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் மதிப்பிற்குரிய நைனார் நாகேந்திரன் அவர்கள் வழங்கி,தாமும் உடனிருந்து நிதி அமைச்சரை சந்திக்க வழி வகுத்தார் அதன்படி, கூட்டமைப்பின் பிரதிநிதிகள், 01.07.2017 முதல் 31.07.2018 வரை நிலுவையில் உள்ள 13 மாத கால ஜிஎஸ்டி தொகையை விசைத்தறி துறைக்கு திருப்பி வழங்குமாறு கோரிக்கை மனுவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் அளித்தனர்.
நிதி அமைச்சர் அவர்கள் கோரிக்கையை மிகுந்த கவனத்துடன் கேட்டறிந்து,
விசைத்தறி துறையின் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இம்மனு வழங்கும் நிகழ்வில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்,ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மேலும் பாஜக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு துறையின் நலனுக்கான வேண்டுகோள்களை முன்வைத்தனர்.