கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல் பட்டு வருகின்றது..
கோவையின் முக்கிய பகுதியில் செயல்பட்டு வரும், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியின் 163 வது நிறுவனர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் மெர்சி ஓமன், தாளாளர் ஆர்.ஜே.பிலிப் பவுலர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொருளாளர் மருத்துவர் ஜேம்ஸ் ஞானதாஸ் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்..
விழாவில் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் விக்டர் ஆனந்த்குமார் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்..
அப்போது பேசிய அவர்,163 ஆண்டுகளாக ஸ்டேன்ஸ் பள்ளி நிலையான தன்மைகளுடன் செயல்பட்டு வருவதாக கூறினார் இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக இருப்பதாக கூறிய அவர்,,தமது கடந்த காலப் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்தார் மாணவர்கள் கல்வி பயிலும் போதே ஒழுக்கத்தையும் கடை பிடிப்பது அவசியம் என கூறிய அவர்,ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களை வழி நடத்துவதில் சிறந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்..
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் பள்ளியில் பணியாற்றி வெள்ளி விழாக் கண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர் இதே போல சிறந்த மதிப்பெண்கள் மற்றும் விளையாட்டுகளில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
நிகழ்ச்சியில்,பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் முனைவர்.சஜீவ் சுகு, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முதல்வர் .பி.ஏ.ஜான் ஸ்டீபன் , துணை முதல்வர்கள் முனைவர்.வ.திவாகரன், பிரியா சீன், உதவித் தலைமையாசிரியர் .மார்டின் லூதர் கிங்,ஸ்டேன்ஸ் சகோதரப் பள்ளிகளின் முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள் ,முன்னாள் இந்நாள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.