ஆலந்தூர் மான்ஃபோர்ட் பள்ளியில் மாபெரும் கராத்தே யோகா சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

30 மாவட்டங்களில் இருந்து 3500 மாணவர்கள் பங்கேற்பு
இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தமிழ்நாடு ஆர்ட் கல்ச்சர் கவுன்சில் டி.என்.ஏ.சி.சி சார்பில் நடத்தும் கராத்தே, யோகா சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக லயன் டாக்டர் எல்.டி.ஆர் இளைய கட்டபொம்மன்,வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சம்இந்த உலக சாதனை நிகழ்ச்சியை டபுல்யு. எஸ்.எஸ்.ஏ. நிறுவனத் தலைவர் சிலம்பம் டாக்டர் எஸ்.சுதாகரன், நேஷனல் செகரட்டரி ஜென்ரல் ஆஃப் இந்தியன் யோகாசன ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் டாக்டர் லட்சுமணன் நாராயணன் மற்றும் தமிழ்நாடு ஆர்ட் கல்ச்சர் கவுன்சில் ஒருங்கிணைப்பு செயலாளரும் கராத்தே மாஸ்டரருமான எம்.முருகன் ஆகியோர்களின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு தனியார் பள்ளியின் முதல்வர்கள், தாளாளர்கள், தொழிலதிபர்கள், கராத்தே, யோக, சிலம்பம் பயிற்ச்சியாளர்கள் என முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட 3500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.