திருப்பரங்குன்றம் தீபம் மீண்டும் எரியும் : கோவையில் இந்து முன்னணியினர் விளக்கு ஏந்தி அதிரடி பிரசாரம் !!!
திருப்பரங்குன்றம் தீபக்கனல் கோவையில் எதிரொலி : கோவை வடக்கு இந்து முன்னணியினர் ‘விளக்கு ஏந்தி’ தீவிரத் தேர்தல் பிரசாரம் !!!
“இந்துக்களின் உரிமை மீட்கப்படும்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முழக்கத்தைத் தொடர்ந்து களமிறங்கிய இந்து முன்னணி தொண்டர்கள் !!!
தமிழகத்தில் ஆன்மீக வழிபாட்டு உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்படுவதாக எழுந்து உள்ள குற்றச்சாட்டுகள், தேர்தல் களத்தில் பரபரப்பாக உருவெடுத்து உள்ளன தென்காசியில் நடைபெற்ற பிரம்மாண்டத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தி.மு.க அரசு இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.
குறிப்பாக, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை விதிக்கப்பட்ட சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அந்தத் தீபம் மீண்டும் ஏற்றப்படும் என கூறினார்.
மத்திய அமைச்சரின் இந்த அதிரடி முழக்கம் ஆன்மீகத் தொண்டர்கள் இடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதன் தாக்கம் கோவையிலும் பலமாக எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் முழக்கத்தைத் தொடர்ந்து, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரத்தினபுரி பகுதியில் இந்து முன்னணியினர் ஒரு வித்யாசமான பிரசாரத்தைக் கையில் எடுத்தனர்.
கைகளில் சுடர்விடும் அகல் விளக்குகளை ஏந்தியபடி வீதி, வீதியாகச் சென்ற தொண்டர்கள், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அவர்கள், தி.மு க அரசின் ஆன்மீக விரோதப் போக்கை முறியடிக்கத் தாமரை சின்னமே தீர்வு என மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்வைத்து கோவையில் முன்னெடுக்கப்பட்டு உள்ள இந்த விளக்கு ஏந்திய பிரச்சாரத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட துணை தலைவர் ஆர்.எம்.சங்கர், முரளி, கதிர்வேல் மற்றும் நகர பொறுப்பாளர்கள், டிவிசன் பொறுப்பாளர்கள், அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் வீடு, வீடாகச் சென்று, ஆன்மீக வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.