தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுகவினரை பறக்கும் படையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வள்ளிநாயகபுரம் ஐந்தாவது தெருவில் பறக்கும் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஒரு சில இளைஞர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.
தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவு சார் பதிவாளர் பொன்மாரி தலைமையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை,தமிழ்நாடு காவல்துறை அடங்கிய பறக்கும் படையினர் அந்த பகுதியில் சென்ற போது அந்த இளைஞர்கள் இவர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
பறக்கும் படையினர் அவர்களை விரட்டிப் பிடித்ததில் ஒரு இளைஞர் அவர்களிடம் மாட்டிக் கொண்டார் அந்த இளைஞனை சோதனை செய்தபோது அவனிடம் 500 ரூபாய் நோட்டுகளாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் கையில் இருந்தது அவரிடம் பாகம் எண், வாக்காளர் வரிசை எண், வாக்காளர் பெயர் போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருந்த ஒரு நோட்டும் கையில் இருந்தது.
உடனடியாக அந்த இளைஞரை கைது செய்த பறக்கும் படையினர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
தெற்கு காவல்துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன