திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் எடவாக்குடி கிராமத்தில் பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து வாக்கு சேகரிப்பு திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் முண்டாசுகட்டி வயலில் நாத்து நடும் பெண்களிடம் நடவு செய்து விவசாயிகளை கவரும் வகையில் வாக்கு சேகரித்தார்.

பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாஜஹான் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அம்மாபேட்டை தெற்கு ஒன்றியத்தில் உள்ள அருள்மொழிப்பேட்டை,கோவிலூர்,ஆலங்குடி,மேலமாகானம்,வண்டாண்டி,பூண்டி,நெட்டாநல்லூர்,எடவாக்குடி, புலவர்நத்தம்,சாலியமங்கலம்,பச்சகோட்டை ஆகிய கிராமங்களுக்கு வாக்காளர்களை சந்தித்து தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் கிராமப்புற விவசாயிகளுடன் நேரடியாக இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பகுதியில் உள்ள எடவாக்குடி விவசாய வயலுக்கு சென்ற அவர் முண்டாசு கட்டி நாற்று நடும் பெண்களுடன் இணைந்து வயலில் இறங்கி நாற்று நட்டார். பெண்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களின் வாழ்வாதாரம், விவசாய சிக்கல்கள் குறித்து கேட்டறிந்து, தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்தார்.


வேட்பாளர் வயலில் இறங்கி பணியாற்றிய நிகழ்வு பொதுமக்கள்
இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் கிராமப்புற மக்களின் மனதை கவரும் வகையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

அப்போது பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரெங்கசாமி,மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, துரை முருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எஸ்.குமார்
தியாக சுரேஷ்,முத்து செல்வன்,நாசர், தாமரைசெல்வன்,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன்,விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நதியா முத்தமிழ் செல்வன்,பேரூர் திமுக செயலாளர் தியாக ரமேஷ் மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன்,தே.மு.தி.க.தொகுதி பொறுப்பாளர் ராசி ரமேஷ், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செந்தில் குமார், தில்லைவனம், மனோகரன் இளங்கோவன்,திராவிடர் கழக மாவட்ட செயலாளர் துரை, மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த மாவட்ட,ஒன்றிய,பேரூர்,கிளை கழக மற்றும் முன்னாள் உள்ளாட்சி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் திரளான பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *