எ.பி.பிரபாகரன்
பெரம்பலூர்
செய்தியாளர்.
பெரம்பலூர் நகர் பகுதியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர். ஏப்.20. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் ஜெயலட்சுமி, அதிமுக சார்பில் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுகன்யாவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிவக்குமாரும் முக்கிய வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் அதிமுக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொகுதி முழுக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ், நாயுடு பேரவை போன்ற கட்சிகளோடு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், பெரம்பலூர் மூன்று ரோடு, மாரியம்மன் கோவில், டி இ எல் சி பள்ளி, பங்களா ஸ்டாப், கே கே நகர், அரசு குடியிருப்பு, வெங்கடேசபுரம் காலனி, சங்கு சமீபம், கடை வீதி, பெருமாள் கோவில், அண்ணாநகர், கல்யாண நகர், அரணாரை, வடக்கு காலனி போன்ற இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது வாக்காளர்களிடம் பேசிய வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் தொகுதியில் ஏற்கனவே பத்தாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பெரம்பலூரில் ஆவின் பால் பண்ணை அமைத்தது, விபத்து அவசர சிகிச்சை மையம் போன்றவற்றை செயல்படுத்தியது ஒவ்வொரு, ஒன்றியத்திலும் அரசு கலைக் கல்லூரி, ஐந்து அடுக்குக் கொண்ட அரசு தலைமை மருத்துவமனை, தாய் சேய் நல சீமான் கட்டிடம், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விசுவக்குடி நீர்த்தேக்கம் கொண்டு வந்தது, மாணவர்களுக்கு தொழில் பயிற்சி நிலையம் கொண்டு வந்தது, பல்வேறு இடங்களில் அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியது போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததாக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் வாக்காளர்களிடம் பேசினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை செழியன், முன்னாள் அரசு வலுக்கறிஞர் கதிர் கனகராஜ் ,பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.