புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி பிச்சைவீரன்பேட் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், பராபவ வருடம் சித்திரை மாதம் துவாதசி திதி, உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுப தினத்தில் திருக்கல்யாண உற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி காலை அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு அருள்பாலித்தார்.இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ பல்லமுடையான் ஐயனாரப்பன் சுவாமி ஆலயத்திலிருந்து தட்டு வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின் மாலை மாற்றுதல், பூப்பந்து, பத்தி உலா போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பின்னர் திரு மாங்கல்ய தாரணம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பிகையின் திருவருளைப் பெற்றனர்.

மேலும் சரவணன் அவர்களின் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. சம்பந்தி அறுசுவை விருந்து நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிச்சைவீரன்பேட் கிராம மக்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *