2026 ஆம் ஆண்டிற்கான துறையூர் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.2026 ஆம் ஆண்டிற்க்கான துறையூர் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க தேர்தல் 27/04/2026 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.அதனால் போட்டியின்றி ஒருமனதாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் சங்க தலைவராக எம்.நடராஜன், செயலாளராக சி.சரவணன், பொருளாளராக
சி.ரவீந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து புதிய சங்க நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்கள் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்