கரூர் செய்தியாளர் மரியான் பாபு .
கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் செல்லும் சாலை அருகே அமைந்துள்ள கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 24 வரை பரணி மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தடகளம், ஜூடோ, ஏரோபிக்ஸ், கைப்பந்து, சதுரங்கம், கேரம், கால்பந்து, கூடைப்பந்து, கராத்தே, யோகாசனா, சிலம்பம் ஆகிய விளையாட்டுக்களில் 600 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இம்முகாமின் நிறைவு விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழுமத் தாளாளர் சா.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன் பேசுகையில் மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், குழு உணர்வை வளர்க்கும் வகையிலும், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் பயிற்சி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 600 மாணவர்களும் இச்சிறப்பு பயிற்சி முகாமில் அனைத்து விளையாட்டுகளிளும்கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். என்பதை மகிழ்ச்சியுடனும், பெருமிதம் கொள்கிறேன் என கூறினார்.மேலும் இம்முகாமில் பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மாணவர்களின் உடல் நலன் பேணும் வகையில் சத்தான சூப் மற்றும் பயிறு வகைகள் பள்ளியின் சார்பில் அன்றாடம் வழங்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பரணி பார்க் முதல்வர் க.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, உடற்கல்வித்துறை கங்காதரன், சந்திரமோகன் மற்றும் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.